சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் கூக்கபுரா, டியூக் பந்துகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனா, இதில் பெரிய வித்தியாசமே stitching-ல் இருக்கிறது. டியூக் பந்தின் stitching… அதாவது தையல், இங்கிலாந்து பவுலர்களின் பாணிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருக்கும். டியூக் பந்து முழுக்க வேகப்பந்து வீச்சு சப்போர்ட் பண்ணும் குணம் கொண்டது. ஆனால், 50 ஓவர் வரை தான் தாக்குப்பிடிக்கும். ஸ்பின்னர்களுக்கு Grip கிடைக்குறது ரொம்ப கஷ்டம். எனவே, அடிக்கடி பந்துகளை மாற்றும் நிலை கேப்டனுக்கு ஏற்படலாம். இது பாஸ்ட் பவுலர்களுக்கு சாதமாக அமையலாம். ஏனெனில், புதிய பந்தில் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இரண்டும் அட்டகாசமாக இருக்கும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக, எந்தவித பயிற்சிப் போட்டியும் இன்றி, நேரடியாக களம் காணும் இந்திய வீரர்களுக்கு, இங்கிலாந்தின் ஆஸ்தான டியூக் பந்துகள் மேலும் பாதகமாக அமையலாம். குறிப்பாக, ரோஹித் போன்று அதிகம் பேடில் பந்துகளை வாங்கும் பேட்ஸ்மேன்களுக்கு இத்தொடர் மெகா சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.