திமுக சார்பில் அமைச்சர்கள் மதிவேந்தன், சிவசங்கர் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டார்கள். 9 எம்.எல்.ஏ பதவியேற்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,பழைய துடிப்புடன், வேகத்துடன் மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.மேலும் இதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.