Sunday, March 26, 2023
V4UMEDIA
HomeNewsWorldஇஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; திணரும் ஐரோப்பிய யூனியன்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; திணரும் ஐரோப்பிய யூனியன்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. ஏனெனில், ஜெருசலம் பகுதியை இரு நாடுகளுமே தங்களின் புனித பூமியாக பார்க்கிறது. ஜெருசலேம் மட்டுமின்றி காசா, மேற்கு கரை போன்ற பகுதிகளும் தங்களுக்கு தான் சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில், கிழக்கு ஜெருசலேமில், அல்-அக்ஸா மசூதியில், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய காவல் துறை மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை  வீசியது. ஆனால், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome  தாக்குதலை முறியடித்தது.

அதை தொடர்ந்து சனிக்கிழமையன்று, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா (Gaza) பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது. 

பெல்ஜியம், அயர்லாந்து, சுவீடன் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை இஸ்ரேலை கடுமையான விமர்சனம் செய்யும் நாடுகளில் அடங்கும். ஆதரவளிக்கும் நாடுகளில் சில இஸ்ரேலுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸ் ஒன்றும் சொல்லாமல் நடுநிலையாக இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments