இஸ்ரேல்-ஹமாஸ் (Israel – Hamas) இடையிலான மோதல்கள் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று வந்த நிலையில், அது மூன்றாம் உலக்போராக உருவெடுக்குமே என்ற அச்சம் உலகில் நிலவியது. இந்நிலையில், உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்கு செய்தியாக, வெள்ளிக்கிழமை (மே 21, 2021), இஸ்ரேல்- ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேலிய நகரமான டெல் அவிவில் (Tel Aviv) ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு, யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் அமைதி ஏற்பட என கோரி பேரணி நடத்துகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்ற பின்னர் மத்திய ஹபீமா சதுக்கத்தில் கூடி அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்