அமேசான் தனது பிரைம் நவ் டெலிவரி செயலியை நீக்கியுள்ளது. இது அமேசான் நிறுவனத்தின் மளிகை விநியோக தளமாகும். Amazon Prime Now அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கான (Amazon Prime Members) தனிப்ப்ட்ட செயலியாகும். ஆனால் இப்போது நிறுவனம் அதை நீக்கியுள்ளது. பிரைம் நவ் (Prime Now) 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
நிறுவனத்தின் இரண்டு மணி நேர டெலிவரி விருப்பம் இப்போது அமேசானின் பிரதான செயலி மற்றும் இணையதளத்தில் கிடைக்கும். பிரைம் நவ் ஏற்கனவே இந்தியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் அமேசான் செயலிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பிரைம் நவ் செயலி மற்றும் வலைத்தளம் நீக்கப்பட்டுள்ளது. பிரைம் நவ் முதன்முதலில் 2014 இல் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், அமேசான் நவ் என்ற பெயரில் மற்ற சந்தைகளில் இது தொடங்கப்பட்டது. இருப்பினும், இது பின்னர் பிரைம் நவ் என மாற்றப்பட்டது