சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாலவிஹார் ஆதரவற்றோர் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறன் குழந்தைகள் 74 பேருக்கு கொரோனா தொற்று (Coronavirus) இருப்பது உறுதியாகியுள்ளது. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் குழந்தைகள் 175 பேரில் 74 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் ஒருவர் மூலமாக குழந்தைகளுக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் அந்த பகுதியை பார்வையிட்டு சென்றுள்ளனர். தற்போது அந்த குழந்தைகள் சம்பந்தபட்ட பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவத் துறையும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.